Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் 2ஆவது நாளாக 2000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு ….!!

தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னை இருந்து வருவதால் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இன்று நள்ளிரவு 12 மணி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ஆகிய 4 மாவட்டங்களின் சென்னை பெருநகர எல்லை பகுதியில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதே போல தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் ஒவ்வொரு சிறப்பு அதிகாரி என்ற முறையில் IAS அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் இன்று கொரோனா பாதிப்பு குறித்த விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டது. அதில் இன்று மேலும் 2141 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு 2ஆவது நாளாக பாதிப்பு 2ஆயிரத்தை தாண்டியுள்ளது.

தமிழகத்தில் மொத்த பாதிப்பாக 52,334ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் சென்னையில் 1373 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 37,070ஆக உயர்ந்துள்ளது.

Categories

Tech |