மேஷ ராசி அன்பர்களே …! தங்கள் துன்பங்கள் துவங்கும் நாளாக இருக்கும். உடன்பிறப்புகளின் ஆதரவு கிடைக்கும். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களை இனம் கண்டு கொள்வீர்கள். நீண்ட நாளைய வழக்குகள் வெற்றியை கொடுக்கும். இன்று எந்த ஒரு செயலையும் மிகவும் அக்கறையுடன் செய்து முடிப்பீர்கள். மற்றவருடன் இருந்த தகராறுகள் தீரும். உடல் ஆரோக்கியம் சீராகும். பணிகளில் கொஞ்சம் கவலை இருந்தாலும் நிறைவாகவே முடியும்.
எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. மற்றவர் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி விடுவதும், பஞ்சாயத்துக்களில் தலையிடாமல் ஒதுங்கி விடுவதும் நல்லது. தேவையற்ற சில பிரச்சினைகளில் தலையிடாமல் இருந்தால் அனைத்து விஷயங்களுமே உங்களுக்கு இன்று சிறப்பாக இருக்கும். காதலர்களுக்கு ரொம்ப நல்ல நாளாக அமையும். நல்ல வெற்றி வாய்ப்புக்கள் ஏற்படும்.
திருமணத்திற்காக முயற்சிகளை மேற்கொள்ளுங்கள் மிகச் சிறப்பாக நடக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஊதா நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிகச் சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிஷ்ட எண்கள்: 1 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் ஊதா நிறம்.