மிதுன ராசி அன்பர்களே….! இன்று சொன்ன சொல்லை நிறைவேற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். தொழில் ரீதியாக அலைச்சல்கள் ஏற்பட்டாலும் ஆதாயம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் வேகம் கூடும். எதிர்பார்த்தபடி பொருட்களை அனுப்புவதில் இருந்த தாமதம் விலகும். நண்பர்களிடம் இருந்த மனக்கசப்புகள் மாறும். எதிர்பார்த்த இடமாற்றமும் ஏற்படும்.
உறவினர்களால் தொல்லைகள் இருந்தாலும் மனம் மகிழ்ச்சியாக தான் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திடீர் பயணங்கள் சந்திக்க வேண்டியிருக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது ரொம்ப நல்லது. புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு தக்க பலன் இன்று கிடைக்கும். காதல் இன்று கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும். பின்னர் பேசும்போது நிதானத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
இன்று கணவன் மனைவிக்கிடையே சின்னதாக பூசல்கள் இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் வெள்ளை நிறம்.