Categories
உலக செய்திகள்

கொரோனா இப்படி தான் பண்ணுது….! உலகுக்கே அமெரிக்க ஆய்வு தரும் புது தகவல்….!!

கொரோனா பாதிப்பு தொடர்பான ஆய்வு தகவலை அமெரிக்க தேசிய சுகாதார இயக்குனர் வெளியிட்டுள்ளார்

கொரோனா தொற்று குறித்து பல நாடுகளில் இருக்கும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு நோயாளியின் உடல் நிலைக்கு தகுந்தவாறு தொற்றின் தாக்கம் இருப்பது மருத்துவ நிபுணர்களை திணற வைத்து வருகின்றது. இதுகுறித்த ஆய்வு தகவல் ஒன்றை அமெரிக்காவின் தேசிய சுகாதார இயக்குனர் பிரான்சிஸ் தற்போது வெளியிட்டுள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிக்கு தகுந்தாற்போல் தொற்று மாறுபட்டு வித்தியாசமான தாக்கத்தை ஏற்படுத்துவது தெரியவந்துள்ளது. அதனடிப்படையில் ஏ பிரிவு இரத்த வகை உள்ளவர்களுக்கு 50 சதவீதம் தீவிர பாதிப்பை ஏற்படுத்தும். அதே நேரம் ஓ பிரிவு இரத்த வகை கொண்டவர்களுக்கு குறைவான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

உடலின் பருமனைக் குறைக்கும் பிஎம்ஐ அளவிற்கு 30க்கு குறைவான பிஎம்ஐ உள்ளவர்களுக்கு நோயின் தாக்கம் குறைவாகவே உள்ளது, 30-34 வரை பிஎம்ஐ  அளவு கொண்டவர்களுக்கு அவற்றின் தாக்கம் இரண்டு மடங்கு அதிகமாகவும், 35க்கு மேல் பிஎம்ஐ  அளவு உள்ளவர்களுக்கு மூன்று மடங்கு தீவிர பாதிப்பு ஏற்படுகிறது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |