Categories
பல்சுவை

காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை நாயகன் ராகுல் காந்தி…. ஆரம்பகால வாழ்க்கை வரலாறு….!!

1970 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19ஆம் நாள் ராஜீவ் காந்தி மற்றும் சோனியா காந்திக்கு மகனாகப் பிறந்தவர் ராகுல் காந்தி. புதுடெல்லியில் பிறந்த ராகுல் காந்தி தனது ஆரம்பக் கல்வியை அங்கிருக்கும் மாடர்ன் பள்ளி மற்றும் டூன் பள்ளியில் தொடங்கினார். ஆனால் இந்திரா காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து பாதுகாப்பின் காரணமாக தங்கையுடன் பள்ளி சென்று படித்தவர் வீட்டிலிருந்து கற்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். பள்ளிப்படிப்பை முடித்த ராகுல் புனித ஸ்டீபன் கல்லூரியில் சேர்ந்து தனது கல்லூரிப் படிப்பைத் தொடங்கினார்.

ராகுல் ரோல்ஸ் கல்லூரியில் 3 ஆண்டுகள் வெற்றிகரமாக முடித்த பின் பட்டம் பெற்றார் அதன்பிறகு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த அவர் டிரினிட்டி கல்லூரியில் படித்து M.Phil பட்டத்தையும் பெற்றார். தனது படிப்பை முடித்துவிட்டு ராகுல் லண்டனில் இருக்கும் ஒரு நிர்வாகத்தின் ஆலோசனை நிறுவனம் மற்றும் கண்காணிப்பு குழுமத்தில் மூன்று வருடங்கள் பணிபுரிந்தார். அதன் பிறகு 2002 ஆம் ஆண்டு இந்தியா திரும்பிய ராகுல் மும்பையில் தனது சொந்த நிறுவனத்தை தொடங்கி நடத்திவந்தார். 2003 ஆம் ஆண்டிற்குப் பிறகு தனது தாயுடன் சேர்ந்து பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்ட ராகுல் காந்தி 2004ஆம் ஆண்டு முழுநேர அரசியல்வாதியாக தன்னை மாற்றிக்கொண்டார்.

 

Categories

Tech |