Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திருமணம் செய்து கொள்கிறேன்… ரூ 7,00,000 வாங்கிவிட்டு ஏமாற்றிய நபர்…!!

இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி ரூ 7 லட்சம் மோசடி செய்த நபரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.

கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளம்பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தின் உயர் கல்வி ஆலோசனை மையத்தில் பணியாற்றி வருகிறார். அதே நிறுவனத்தில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது நபி என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

இந்த 2 பேரும் உயர் கல்வி குறித்து மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக பல்வேறு கல்லூரிகளுக்குச் சென்றுவருவது வழக்கம்.. முதலில் இவர்கள் 2 பேரும் நண்பர்களாக தான்  பழகியுள்ளனர்.. நாட்கள் செல்ல செல்ல அது காதலாக மாறியுள்ளது. காதலிக்கும்போது முகமது நபி அந்த இளம்பெண்ணிடம் நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என பலமுறை கூறியிருக்கிறார்.

இந்தநிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு முகமது நபி தன்னுடைய தாயாருக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறி மருத்துவச் செலவிற்காக 7 லட்சம் ரூபாயை அந்த பெண்ணிடம் வாங்கிச் சென்றுள்ளார். பின்னர் முகமது நபி அந்த பெண்ணுடனான தொடர்பைத் துண்டித்து விட்டார். சில தினங்களுக்கு முன் அந்தப் பெண் முகமது நபியைத் தொடர்புகொண்டு, தன்னைத் திருணம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆனால் அதற்கு அவர் உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறி கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து நபி அந்தப்பெண்ணின் வீட்டுக்கே நேரில் சென்று தகராறு செய்துள்ளார். அப்போது, பெண்ணின் குடும்பத்தினர் திருமணம் செய்யா விட்டாலும் பரவாயில்லை, கொடுத்த பணத்தைத் திருப்பிக் தருமாறு கேட்டுள்ளனர்.. அதற்கு முகமது நபி பணம் எல்லாம் தர முடியாது என்று மறுத்துப் பேசியுள்ளார்.

இதனையடுத்து இதுகுறித்து பாதிக்கப்பட்ட அந்தபெண் செல்வபுரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது நபியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |