சீனாவுடனான மோதல் குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற இருக்கிறது.
இன்று மாலை 5 மணிக்கு சீனா அத்துமீறி தாக்கிய விவகாரம் குறித்து பேச அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என்று இரண்டு தினங்கள் முன்பாக பிரதமர் அலுவலகம் அழைப்பு வெடுத்திருந்து. இதில் முதல் முறையாக திமுக தலைவர் முக. ஸ்டாலின் பங்கேற்கிறார். வழக்கமாக இதுபோன்ற கூட்டத்தில் திமுக சார்பில் நாடாளுமன்றக்குழு தலைவராக இருக்க கூடிய டி ஆர் பாலு தான் பங்கேரப்பர்.
இந்த நிலையில் பிரதமருடனான கூட்டத்தில் முதல் முறையாக முக.ஸ்டாலின் பங்கேற்க போகிறார் என்பது முக்கியத்துவமாக பார்க்கப்படுகின்றது. இந்திய – சீன எல்லை தொடர்பாக பேசக்கூடிய நிலையில் திமுக தலைவர் என்ன பேச போகின்றார் ? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சொன்னால் திமுகவும், பாஜகவும் எதிரும் புதிருமாக இருந்தன. இரு கட்சிகளும் கடும் விமர்சனங்களை வைக்க கூடிய நிலையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் சொல்லக்கூடிய கருத்துக்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காங்கிரஸ் சார்பாக அதன் தலைவர்கள் பங்கேற்க போகிறார்கள். தமிழகத்தை பொருத்தவரை பிரதான எதிர்க்கட்சியாக இருக்க கூடிய திமுக சார்பில் அதன் தலைவர் ஸ்டாலின், அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பார் எனபது குறிப்பிடத்தக்கது.