Categories
அரசியல்

“அஞ்சா நெஞ்சனும் ஸ்டாலின்” மதுரையில் நடந்த சுவாரஸ்யம்…!!

 திமுக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக மதுரையில் ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்.

மதுரை மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் , மார்க்கெட் , கடை வீதிகள் என நடந்து சென்று தி மு க தலைவர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். அப்போது மார்க்கெட்டில் வணிகர்கள் , மக்களிடம் , கலந்துரையாடிய ஸ்டாலின் பின்னர் அங்கிருந்த கடை ஒன்றில் வேட்பாளருடன் சேர்ந்து குடித்தார்.

இதையடுத்து அங்கிருந்த ஏராளமான இளைஞர்கள் , சிறுவர்கள் என அனைவரும் முக.ஸ்டாலினிடம் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். முக.ஸ்டாலினிடம்  ஒரு இளைஞர் எடுத்துக் கொண்ட செல்பி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் முக . அழகிரியின் படம் பொறிக்கப்பட்ட டீசர்ட் அணிந்து  ஆர்வமாக ஸ்டாலினுடன் செல்பி எடுத்துள்ளார். டீசர்ட்டில் அழகிரி செல்வியுடன் ஸ்டாலினும் என பலரும் டீ சர்ட்டின் அழகிரி செல்வியுடன் ஸ்டாலினும் என பலரும் அந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர். மேலும் அங்கே மக்களின் குறைகளை ஸ்டாலின் கேட்டறிந்தார்.

Categories

Tech |