Categories
மாநில செய்திகள்

10, 11ம் வகுப்புகளுக்கான மதிப்பெண்கள் பதிவேற்றும் பணி வரும் 29ம் தேதி தொடங்கும்..தேர்வுத்துறை!!

10 மற்றும் 11ம் வகுப்புகளுக்கான மதிப்பெண்கள் பதிவேற்றும் பணி வரும் 29ம் தேதி தொடங்கும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

ஜூன் 29ம் தேதி முதல் ஜூலை 8ம் தேதி வரை இணையத்தில் மதிப்பெண்களை பதிவேற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் இணையத்தில் மதிப்பெண் பதிவேற்றும் போது, தேர்வுத்துறை இயக்குநரின் உத்தரவின்றி அறையை விட்டு வெளியேறக்கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 5ம் கட்டமாக அமலில் உள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் அனைத்து கல்லூரி, பள்ளி, கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும், கொரோனா வைரஸின் தீவிரம் காரணமாக 10,11,12ம் வகுப்பு தேர்வுகள் தவிர மற்ற அனைத்து வகுப்புகளின் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, ஆல்பாஸ் என்ற அறிவிப்பை மணிலா அரசுகள் வெளியிட்டன.

இந்த நிலையில், தமிழகத்தில் ஜூன் 15ம் தேதி முதல் 10ம் வகுப்பு தேர்வுகள், மற்றும் 11 வகுப்பின் விடுபட்ட தேர்வினை நடத்த முடிவெடுக்கப்பட்டது. ஆனால் அதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின, மேலும் இதை தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியது. இதையடுத்து 10ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்து, மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் என அறிவிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இறுதி மதிப்பெண்களை காலாண்டு மற்றும் அரையாண்டு மதிப்பெண்கள் அடிப்படையில் கணக்கிட வேண்டும் என தெரிவித்திருந்தது. மேலும், ஜூலை முதல் வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். அதன்படி, இணையத்தில் மதிப்பெண்களை பதிவேற்றும் பணிகள் தொடங்கப்படும் என தேர்வுத்துறை தற்ப்போது தெரிவித்துள்ளது.

Categories

Tech |