Categories
உலக செய்திகள்

நிறவெறி தாக்குதல்…. கருப்பின வாலிபரை சுட்ட போலீஸ் மீது கொலை வழக்கு…!!

அமெரிக்காவில் கருப்பின வாலிபரை சுட்டுக் கொலை செய்த போலீஸ் அதிகாரி மீது கொலைக்குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது

அமெரிக்காவில் கடந்த மாதம் 25ஆம் தேதி போலீஸ் அதிகாரி ஒருவர் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டதால் கறுப்பினத்தைச் சேர்ந்த வாலிபர் ஜார்ஜ் என்பவர் மரணம் அடைந்தார். அதை  தொடர்ந்து நிறவெறி தாக்குதலுக்கு எதிராக அமெரிக்காவில் அதிக அளவு போராட்டங்கள் தொடங்கின. இந்நிலையில் கடந்த 12ம் தேதி அட்லாண்டாவில் வைத்து மற்றொரு கறுப்பினத்தைச் சேர்ந்த வாலிபர் ப்ருக்ஸ் என்பவர் காவல்துறையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இது அமெரிக்காவில் போராட்டத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. கொலை செய்த போலீஸ் அதிகாரி காரேட் பணி நீக்கம் செய்யப்பட்டதாக அட்லாண்டா நகரின் மேயர் தெரிவித்தார். அதோடு கருப்பின வாலிபரை சுட்டுக் கொலை செய்த அதிகாரி காரேட் மீது கொலை குற்றம் பதிவகியுள்ளது.  இந்த சம்பவத்தின் போது அவருடன் இருந்த மற்றொரு போலீஸ் அதிகாரி டேவின் இது மிகவும் மோசமான தாக்குதல் என்றும்  பதவிப் பிரமாணத்தை மீறிய குற்றச்சாட்டு எனவும் கூறியுள்ளார்.

Categories

Tech |