கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி கண்டறியப்பட்டு தன்னார்வலர்கள் மீது பரிசோதனைக்கு செலுத்தப்பட்டுள்ளது
ரஷ்யாவில் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி கண்டறியப்பட்டு பரிசோதனை செய்ய அங்கிருக்கும் மருத்துவமனை ஒன்றில் தன்னார்வலர்கள் 18 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பு மருந்து செலுத்தி இதுவரை அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் உடல்நிலை குறித்த புகார்கள் எதுவும் வந்ததாகவும் தகவல் இல்லை என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தடுப்பூசி போடப்பட்ட 18 தன்னார்வலர்களும் மருத்துவ நிபுணர்களின் மேற்பார்வையில் வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 5.60 லட்சம் பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு 7,600 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தன்னார்வலர்கள் மீது பரிசோதனைக்காக தடுப்பு ஊசி செலுத்தப்பட்டிருக்கும் செய்தி நாட்டு மக்களிடையே எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.