Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

உலக அளவில் இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி…. நன்றி கூறிய பிரதமர் மோடி…!!

ஐநாவில் நடைபெற்ற தேர்தலில் இந்தியா வெற்றி பெற்றதால் உலக நாடுகளுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

ஐநா சபையில் சக்திவாய்ந்த அமைப்பு என கருதப்படுவது பாதுகாப்பு கவுன்சில் இது ஐந்து நிரந்தர உறுப்பினர்களாக அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளை கொண்டும் தற்காலிக உறுப்பினர்களாக 10 நாடுகளை கொண்டும் செயல்பட்டு வருகின்றது. தற்காலிக உறுப்பு நாடுகளை தேர்வு செய்ய வருடம் தோறும் சுழற்சி முறையில் தேர்தல் நடைபெறும். 2021 ஆம் ஆண்டிற்கான தற்காலிக உறுப்பு நாடுகளுக்கான தேர்தல் நேற்று நடந்தது. தேர்தலில் வெற்றி பெற நாடுகள் மூன்றில் இரண்டு சதவீத வாக்குகளை பெறவேண்டியது அவசியம். அதாவது 193 நாடுகள் இருந்தால் 178 நாடுகளின் வாக்குகளை பெற்றிருக்க வேண்டும்.

நடைபெற்ற தேர்தலில் ஆசிய பசுபிக் பிராந்திய நாடான நமது இந்தியாவும் போட்டியிட்டது. இதில் ஆசிய நாடுகளையும் சேர்த்து 184 நாடுகள் ஆதரவளித்து இந்தியாவை வெற்றி பெறச் செய்துள்ளது. இதனை தொடர்ந்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக உறுப்பு நாடாக இந்தியா எட்டாவது முறையாக தேர்வாகியுள்ளது. வரும் ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி முதல் இந்தியா ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினராக செயல்பட தொடங்கும். இந்த வெற்றியை தொடர்ந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெற்றி பெற ஆதரவு வழங்கிய உலகநாடுகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |