காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 984 ஆக அதிகரித்துள்ளது. சென்னையை தொடர்ந்து அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களை ஆகும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் 945 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
மேலும் நேற்று வரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று 502 பேர் குணமடைந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 433ல் இருந்து 472- ஆக அதிகரித்துள்ளது. இதுவரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.