தந்தை ஒருவர் தனது மகனுக்கு மரபொம்மையை திருமணம் செய்து வைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
உத்தர் பிரதேசத்தில் 9 பிள்ளைகளின் தந்தையான சிவ் மோகன் என்பவர் தனது 8 மகன்களுக்கும் திருமணத்தை முடித்து விட்ட நிலையில் கடைசி மகனுக்கு மிகவும் வினோதமாக திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். மரத்தினால் செய்யப்பட்ட உருவ பொம்மைக்கு மணப்பெண் அலங்காரம் செய்யப்பட்டு அதனருகில் மணமகனாக தனது மகனை அமர வைத்து திருமண சடங்குகள் நடத்தப்பட்டு உறவினர்கள் நண்பர்கள் கூட எளிமையான முறையில் திருமணம் செய்துவைத்துள்ளார்.
இதுகுறித்து தந்தை கூறிய போது கடைசி மகனுக்கு சொத்து எதுவும் இல்லாததாலும் அறிவாளியாக இல்லாததாலும் இவ்வாறு திருமணம் செய்ய வேண்டிய சூழல் வந்ததாக கூறியுள்ளார். ஆனால் அக்கம்பக்கத்தை சேர்ந்தவர்கள் சிவ் மோகன் மரணம் அடைவதற்கு முன்பு தனது 9 மகனுக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என ஆசைப்பட்டு கடைசி மகனுக்கு இப்படி ஒரு வினோத திருமணத்தை நடத்தி வைத்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.