Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திருவண்ணாமலை திருவள்ளூர் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

தமிழகத்தின் 35 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது: சுகாதாரத்துறை!!

தமிழகம் முழுவதும் 35 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில் 1,322, வேலூரில் 103, செங்கல்பட்டில் 95, திருவள்ளூரில் 86, மதுரையில் 58, காஞ்சிபுரத்தில் 39, திருவண்ணாமலையில் 37, கோவையில் 29, கடலூரில் 5, அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சியில் தலா 7, ராமநாதபுரம் மற்றும் திண்டுக்கல்லில் தலா 22, கன்னியாகுமரியில் 7, நாகையில் 9, நீலகிரியில் 6, புதுக்கோட்டையில் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கரூரில் 3, சேலத்தில் 18, ராணிப்பேட்டையில் 4, தென்காசியில் 14, தஞ்சையில் 13, தேனியில் 15, திருப்பத்தூரில் 8, திருவாரூரில் 10, தூத்துக்குடியில் 28, நெல்லையில் 27, திருப்பூரில் 2, திருச்சியில் 13, விழுப்புரத்தில் 31, விருதுநகரில் 15, ஈரோடு 1, சிவகங்கையில் 18, கிருஷ்ணகிரியில் 13, தருமபுரியில் 3 பேர் என இன்று 35 மாவட்டங்களில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பிற மாநிலங்களில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களில் 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் டெல்லியில் இருந்து தமிழகம் வந்த 15 பேர், மராட்டியத்தில் 13, கர்நாடகத்தில் 3, ராஜஸ்தான் மற்றும் பீகாரில் இருந்து வந்த தலா ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பிய 3 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இருந்து வந்த 2 பேர், மாலத்தீவில் இருந்து தமிழகம் வந்த ஒருவர் என 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,115 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 54,449 ஆக உயர்ந்துள்ளது.

Categories

Tech |