Categories
உலக செய்திகள் வணிக செய்திகள்

“கொரோனாவின் தாக்கம்” 6,000 பேர் பணிநீக்கம் செய்ய முடிவு…. நிறுவனத்தின் ஊழியர்கள் அதிர்ச்சி….!!

விற்பனையில் சரிவு ஏற்பட்டதால் பல காரியங்கள் நிறுவனமான பிஎம்டபிள்யூ தனது ஊழியர்கள் 6000 பேரை பணி நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது

உலக நாடுகளிடையே கொரோனா தொற்று பரவ தொடங்கியதால் பல துறைகள் இழப்பை சந்தித்து வருகின்றது. அதிலும் குறிப்பாக வாகனத் துறையில் அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் பல நிறுவனங்கள் அவர்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றனர். ஜெர்மனி நாட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிரபல கார் நிறுவனமான பிஎம்டபிள்யூ நிறுவனத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

உலகின் பல நாடுகளில் கிளைகளைக் கொண்டுள்ள இந்த நிறுவனம் கொரோனா தொற்று காரணமாக அதிகளவு விற்பனை பாதிக்கப்பட்டு பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது. இதனை தொடர்ந்து தனது ஊழியர்களின் 6000 பேரை பணி நீக்கம் செய்வதற்கு முடிவெடுத்துள்ளது. இந்த வருடத்தின் இறுதியில் இந்த பணிநீக்கம் மேற்கொள்ளப்படும் என தெரிவித்ததோடு தானியங்கி கார் உருவாக்கும் பணியையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது. அந்நிறுவனம் 6,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யபட இருக்கும் முடிவு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Categories

Tech |