Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மனுஷனா இருந்தா நோய் வரத்தான் செய்யும் – முதல்வர் பழனிசாமி

மனுஷனா இருந்தா நோய் வரத்தான் செய்யும்,  குணமடைய செய்வது  அரசின் கடமை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர், இது ஒரு புதிய நோயாக இருக்கின்ற காரணத்தினாலேயே உலகிலேயே இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. நம்முடைய மருத்துவரின் கடும் முயற்சியின் காரணமாக  செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் சிறப்பான முறையிலே பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை சுமார் 54 சதவீதம் ஆக  இருக்கின்றது. இருந்தாலும் மக்களுக்கு அரசு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி கொண்டிருக்கின்றது. ஊடகத்தின் வாயிலாக, பத்திரிக்கை வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.

அதுமட்டுமல்ல உள்ளாட்சித் துறை, காவல்துறை  வீதிவீதியாக ஒலிபெருக்கி மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு அறிவித்த ஊரடங்கை அரசு அமல்படுத்தி, மக்கள் வீட்டிலேயே இருப்பதற்கான  வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக கொரோனா பரவலை தடுக்கலாம்.  கொரோனா பரவலை தடுக்க தான் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நோயின் அறிகுறி இருக்கின்றவர்கள் வெளியே சென்றால், மற்றவர்களுக்கும் பரவிவிடும். எனவே  ஊரடங்கு மூலமாக வெளியில் செல்வதை தடுத்து தொற்று ஏற்படாமல் தடுக்கப்படுகின்றது.

அதோடு வீடு வீடாக சென்று  மாநகராட்சி ஊழியர்கள், மருத்துவர்கள், சுகாதாரத் துறை இணைந்து  நோய் அறிகுறி இருக்கின்றதா என்று பரிசோதனை நடத்தி வருகின்றார்கள். அதில் யாருக்கும் நோய் தொற்று இருந்தால் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றது. இதற்கு இந்த ஊரடங்கு பயன்படுகின்றது. ஆங்காங்கே காய்ச்சலை கண்டறிவதற்காக சுமார் 300 இடங்களில் அந்த பரிசோதனைக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை 450 ஆக உயர்த்த  முயற்சிகள் எடுக்கிறோம்.

கொரோனா பரிசோதனை செய்து, சிகிச்சைக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். கொரோனா நோயாளிகளை யாரும் ஒதுக்கி வைக்கப் படுவது கிடையாது.  மனுஷனா இருந்தா நோய் வரத்தான் செய்யும். ஆனா அதை குணமடைய செய்வது  அரசின் கடமை. இதுக்கு தான்  மருத்துவ நிபுணர்கள்,உலக சுகாதார அமைப்பு, மத்திய சுகாதாரத்துறை சொல்லுது முகக்கவசம் போடுங்கள், சமூக இடைவெளியை பின்பற்றுங்க, வெளியில் செல்கின்ற போது கை, கால்களை சுத்தமாக தூய்மையாக வைத்துக்கொள்ளுங்கள். கழிப்பறையை சுத்தமா வைத்துக்கொள்ளுங்கள். கொரோனா வைரஸ் நோய் வந்தால் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் ? என்று தத்ரூபமா ஊடகத்தின் வாயிலாக  தினந்தோறும் காட்டுகின்றோம். முக்கிய நடிகர்களை வைத்தும், பிரபலங்களை வைத்து குறும் படங்களை  வெளியிடுகின்றோம் என்று முதல்வர் தெரிவித்தார்.

Categories

Tech |