Categories
மாநில செய்திகள்

கொரோனா எப்போது ஒழியும் என்பது கடவுளுக்கு தான் தெரியும்… முதல்வர் கூறிய விஷயங்கள் என்ன?

கொரோனா எப்போது ஒழியும் என்பது கடவுளுக்கு தான் தெரியும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

சென்னை வேளச்சேரி குருநானக் பள்ளியில் கொரோனா பாதுகாப்பு மையத்தில் இன்று முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு நடத்தினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, இந்தியாவிலேயே அதிக அளவில் தமிழகத்தில் தான் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தமிழகத்தில் மேலும் கூடுதலாக பரிசோதனைகள் மேற்கொள்ள அறிவுறுத்துத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 83 பரிசோதனை மையங்கள் உள்ளன. அரசு சார்பில் 45, தனியார் சார்பில் 30 பரிசோதனை மையங்கள் உள்ளன. மேலும் வசதியுள்ளவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகிறார்கள். வசதி இல்லாதவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து பேசிய அவர், தனக்கு கொரோனா இல்லை என அமைச்சர் அன்பழகனே கூறிவிட்டார். ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை என அவர் கூறியுள்ளார். கொரோனா நோய் தடுப்புக்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனது தலைமையில் மருத்துவ வல்லுனர்கள் உள்ளிட்ட குழுக்களுடன் பலமுறை ஆலோசனை நடத்தப்பட்டது.

தமிழகத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 54% ஆக அதிகரித்துள்ளது. வீடு வீடாக சென்று நோய் அறிகுறி இருப்பவர்களை கண்டறிந்து பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் வீதி வீதியாக ஒலிபெருக்கிகளை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஊரடங்கின் மூலம் கொரோனா நோய் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்கத்தான் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.அதற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என முதல்வர் கூறியுள்ளார். கொரோனா பதித்தவர்களில் 80% பேருக்கு அறிகுறிகள் ஏதும் இருப்பதில்லை என முதலமைச்சர் பழனிச்சாமி கூறியுள்ளார். மேலும், 20% பேருக்கு மட்டுமே அறிகுறி தெரிகிறது. அதிலும், 7% அல்லது 8% பேருக்குத்தான் தீவிட பாதிப்பு ஏற்படுகிறது.

மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் பொழுது கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும். கடைகளில் பொருட்களை வாங்கும் பொழுது இடைவெளி விட்டு நின்று பொருட்களை வாங்க வேண்டும். காய்கறி கடைக்கோ, இறைச்சி கடைக்கோ, வங்கிகளுக்கோ எங்கு சென்றாலும் சமூக இடைவெளியை பின்பற்றி முககவசம் அணிந்து சென்றால் தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்.

ஒரே வழி இதுதான் என்று மருத்துவ நிபுணர்கள் சொல்கிறாரகள். இதை மக்கள் தான் கடைபிடிக்க வேண்டும். மக்களின் ஒத்துழைப்பு மூலமாக தான் நோய் பரவல் தடுக்க முடியும். ஸ்பீட் பிரேக் போடுவது போல,நோய் பரவலை தடுக்கத்தான் முழுஊரடங்கு. ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து இதுவரை முடிவெடுக்கவில்லை. மருத்துவ வல்லுநர்கள் கூறும் வழிமுறைகளை அரசாங்கம் கடைபிடிக்கிறது.

Categories

Tech |