Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அதை கேட்காதீங்க முடியாது… வேணும்னா இதை எடுத்துக்கோங்க – அண்ணா பல்கலை முடிவு …!!

கொரோனா சிகிச்சைக்கு அண்ணா பல்கலை கழக ஆடிட்டோரியம் தரு தாயார் என்று துணைவேந்தர் சுரப்பா தெரிவித்துள்ளார்.

சென்னையில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. நேற்று பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், மாலைக்குள் அண்ணா பல்கலைகழக மாணவர் விடுதியை ஒப்படைக்க வேண்டும். இல்லை என்று மாநகராட்சியே கையில் எடுக்கும் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி துணை ஆணையர், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பாவை சந்தித்துப் பேசியபோது, அங்கு மாணவர்கள் வைத்திருந்த உடைமைகள் இருக்கின்றது. அவர்களின் உடைமைகளை வெளியே வைக்க முடியாது. பாதுகாப்பாக வைக்க இடம் இல்லை. எனவே விடுதியை  தர இயலாது. அதற்கு பதிலாக தற்போது ஆடிட்டோரியம் தருகின்றோம். அது ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் இருக்கும். மேலும் புதிதாக இரண்டு கட்டிடங்கள் உள்ளது. அதையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

மேலும் துணை ஆணையர் சந்தித்தபோது அவரையும் அழைத்துக்கொண்டு புதிய கட்டடத்தையும் பார்வையிட வைத்துள்ளார். இதுகுறித்து மாநகராட்சியிடம் பேசுகின்றோன் என்று துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |