சென்னையில் நேற்று புதிதாக 1,322 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 38,327 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 529 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 21,098 பேர் குணமடைந்துள்ளனர். இந்த நிலையில் 16,699 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று கோடம்பாக்கம் மண்டலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 4,000த்தை தாண்டியுள்ளது.
மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை :
ராயபுரம் – 5,981,
தண்டையார் பேட்டை – 4,869,
தேனாம்பேட்டை – 4,652,
கோடம்பாக்கம் – 4,149,
அண்ணா நகர் – 3,972,
திரு.வி.க நகரில் – 3,356,
அடையாறு – 2,204,
வளசரவாக்கம் – 1,638,
திருவொற்றியூர் – 1,434,
அம்பத்தூர் – 1,374,
மாதவரம் – 1,046,
பெருங்குடி – 762,
சோழிங்கநல்லூர் – 723,
ஆலந்தூர் – 808,
மணலி – 547.