Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் அக். 1-ம் தேதி முதல் ஒரே நாடு …. ஒரே ரேஷன் ….!!

தமிழகத்தில் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல்படுத்தப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்

நாடு முழுவதும் மத்திய அரசு ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை அறிமுகம் செய்தது. இது தமிழகத்திலும் அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு, அதற்கான நடைமுறைகளும், பணிகளும் தொடங்கப்பட்டன.  கொரோனா பரவலுக்கு முன்பாகவே தமிழ்நாட்டில் ஒரே நாடு ஒரே தேசம் திட்டம் செயல்படுத்தும் முறையில் திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய இரண்டு மாவட்டங்களில் கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர் கொரோனா பாதிப்பின் காரணமாக இந்த திட்டமானது தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தமிழக உணவுத்துறை அமைச்சர், மத்திய உணவுத்துறை அமைச்சருடன் காணொலி காட்சி மூலம் பேசும்போது தமிழகத்தில் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் செயல்படுத்துவதை தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தார்.அதே போல இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களிடம் பேசும்போது, தமிழகத்தில் அக்டோபர் 1ம் தேதி முதல் 1 ஆம் தேதி முதல் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டமிட்டு செயல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |