Categories
அரசியல்

“மதிமுக_வில் உள்ள மா_வை நீக்க வேண்டும்” ஒருமையில் பேசிய முதல்வர்…!!

மதிமுகவில் உள்ள மா_வை நீக்கி விட்டு திமுக என்று மாற்றிக்கொள்ளவும் என தமிழக முதல்வர் விமர்சித்துள்ளார்.

விழுப்புரம் மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் வடிவேல் ராவணன் ஆதரித்து பிரசாரம் செய்த முதல்வர் பொதுக்கூட்டத்தில் மதிமுக_வை கடுமையாக விமர்சித்தார். அப்போது பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில் , மதிமுக  கட்சியின் ஒரு  சின்னத்தை வைத்துக் கொண்டு அடுத்த கட்சியின் சின்னத்தில் நிற்கிறார் என்றால் அவரெல்லாம் தலைவரா மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் மா_வை நீக்கிவிட்டு திராவிட முன்னேற்ற கழகம் என்று வைத்துக்கொள்ளுங்கள். கொள்கை ஒன்னும் கிடையாது. ஒரு கட்சியை வைத்துக் கொண்டு அடுத்த சின்னத்தில் நிற்கின்றாய் என்றால் என்ன இதெல்லாம் பதவி வெறி , பதவி வெறி , நாட்டு மக்களைப் பற்றி கவலையில்லை,  கொள்கை பற்றி கவலை இல்லை ,  என்று சாடினார்.

முதல்வர் வைகோ க்கான பட முடிவு

ஒரு கட்டத்தில் தமிழக முதல்வர் ஒருமையில் பேச ஆரம்பித்து விட்டார். அப்போது , ஈரோட்டில் மேடை போட்டு பேச உனக்கு என்ன தகுதி இருக்கு . நீ முதலில் கட்சி நடத்து , உன் கட்சியை அடமானம் வைத்து விட்டு மற்றவர்களை பற்றி பேச என்ன தகுதி இருக்கின்றது .  ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கு அதிகாரத்தை வரவைப்பதற்காக கொள்கையை யாரும் விட்டுவிடக்கூடாது. உனக்கு கொள்கை கிடையாது , கோட்பாடும் கிடையாது. இதுவரைக்கும் இலங்கையை பத்தி பேசிட்டு இருந்த , காங்கிரஸ் தமிழ் மக்களை கொத்துக் கொத்தாக கொன்றார்கள் என்று சொல்லிவிட்டு கைகட்டி வாய்பொத்தி திமுக தலைவரிடம் சரணடைந்து விட்டார். இதைவிட என்ன கேவலம் இருக்க முடியுமா என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.

Categories

Tech |