உலகிலேயே நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக கொரோனா பாதிப்பு புதிய உச்சம் தொட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் 210க்கும் மேற்பட்ட நாடுகளின் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலக வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனாவின் பிடியில் சிக்கி உள்ளது. அங்கு 2,297,338 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு 121,407 பேர் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளையும் கொரோனா விட்டுவைக்கவில்லை. ரஷ்யா,UK ,ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், கொரோனாவால் கதிகலங்கி போய்யுள்ளன.
உலகம் முழுவதும் 8,766,887 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டயுள்ள நிலையில் 462,706 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 4,628,625 பேர். குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 3,675,556 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன. இதில் 54,813 பேர் இக்கட்டான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றன.
உலகளவில் இதுவரை இல்லாத அளவாக நேற்று ஒரே நாளில் அதிக கொரோனா தொற்று பதிவாகியுள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 1,81,005 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக பிரேசில் நாட்டில்55,209 பேரும் அமெரிக்காவில் 33,539 பேரும் இந்தியாவில் 14,721 பேரும், ரஷ்யாவில் 7,972 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன.
உலகளவில் கடந்த இரண்டு நாளில் மட்டும் 3,21,533 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.