இந்திய – சீன எல்லையில் சண்டைக்கு பிறகு இந்திய பகுதிக்குள் சீன அத்துமீறல் இல்லை என்றுதான் நரேந்திர மோடி பேசினார் என பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்திருக்கிறது.
நேற்றைக்கு நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தின் போது பிரதமர் இந்திய பகுதிக்குள் சீன அத்துமீறல் நடைபெறவில்லை என தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. தொடர்ந்து எதிர்க்கட்சிகளும் அதே கேள்வியை முன் வைத்த நிலையில் தற்போது அதற்கு பிரதமர் விளக்கம் அளித்துள்ளது. நேற்று நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிறகு பிரதமருடைய கருத்து என்ன ? அவர் சொல்லியதில் உள்ளர்த்தம் என்னவாக இருக்கிறது ? என்று பல்வேறு விதமான கருத்துக்கள் அரசியல் ரீதியாக தொடர்ந்து பரிமாறப்பட்டு வந்த அந்த நிலையில் தற்போது பிரதமர் அலுவலகம் இந்த விளக்கத்தை அளித்துள்ளது.
பிரதமர் விளக்கத்தில் எந்த விதமான குழப்பமும் இருக்கக் கூடாது, ஏனென்றால் இது உள்நாட்டு பிரச்சினை மட்டுமல்ல, சீனாவுடனான பிரச்சினை மட்டுமல்ல, சர்வதேச அளவில் இது போன்ற விஷயங்கள் உன்னிப்பாகக் கவனிக்கப்படும். ஆகவே அதில் இந்திய நிலைப்பாடு என்ன என்பதற்காக பிரதமர் அலுவலகம் இந்த அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. இந்திய எல்லைக்குள் சீனா அத்துமீறல் இல்லை என்பதன் அர்த்தம், இந்த மோதலுக்கு பிறகு எந்தவிதமான ஊடுருவலும் இல்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.