Categories
தேசிய செய்திகள்

2 km தூரத்திற்கு கேட்ட பயங்கர சத்தம்…. வானிலிருந்து விழுந்த வினோத பொருள்… அச்சத்தில் மக்கள்…!!

பலத்த சத்தத்துடன் வானத்திலிருந்து விழுந்த மர்ம பொருளினால் மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர்

ராஜஸ்தான் மாநில சஞ்சோர் பகுதியில் வானில் இருந்து விண்கல் போன்ற ஒன்று விழுந்துள்ளது பலத்த ஒலியுடன் கீழே விழுந்த அந்த பொருளினால் பொதுமக்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு விரைந்து வந்து பார்த்த பொழுது அது விழுந்த இடத்தில் இரண்டு அடி ஆழத்திற்கு பள்ளம் உருவாகியிருந்தது. மேலும் மக்களிடம் விசாரித்ததில் இரண்டு கிலோமீட்டர் சுற்றளவிற்கு அது விழுந்த சத்தம் கேட்டதாக தெரிவித்துள்ளனர்.

திடீரென வானில் இருந்து விழுந்த அந்த மர்ம பொருள் மிகவும் வெப்பமாக இருந்ததால் அதன் வெப்பம் குறைந்த பிறகு காவல்துறையினர் அதனை எடுத்துச் சென்றனர். 2.78 கிலோ எடை கொண்ட அதனை அருகில் இருந்த நகை கடைக்கு சொந்தமான ஆய்வகத்தில் முதல் கட்டமாக சோதனை செய்யப்பட்டது. அப்போது பிளாட்டினம், ஜெர்மானியம், நிக்கல் போன்ற இரும்புகள் அடங்கியிருப்பது தெரியவந்ததை தொடர்ந்து அடுத்த கட்ட சோதனைக்காக ஜெய்ப்பூரில் இருக்கும் புவியியல் ஆய்வகத்திற்கு அந்த பொருளை அனுப்பி வைக்க உள்ளனர்.

Categories

Tech |