தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 1,045 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை பேர் 31,316 குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்ப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் விகிதம் 55.09% ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 2,396 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 வாரங்களாக 1,000த்தை தாண்டிய நிலையில், இன்று 4வது நாளாக 2,000த்தை தாண்டியுள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் கொரோனா தொற்று 56,000தாண்டியுள்ளது. மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 56,845 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று மட்டும் கொரோனாவால் 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 704 ஆக அதிகரித்துள்ளது.
இறப்பு விகிதம் 1.238% ஆக உள்ளது.