தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 38 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன் காரணமாக இதுவரை மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 704 ஆக உயர்ந்தது. மேலும் மாநிலம் முழுவதும் தற்போது உயிரிழந்தவர்களின் விகிதம் 1.238% ஆக உயர்ந்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களில் அதிகமானோர் சென்னையை சேர்ந்தவர்கள் ஆவர்.
தமிழகத்தில் இன்று மேலும் 2,396 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 வாரங்களாக 1,000த்தை தாண்டிய நிலையில், இன்று 4வது நாளாக 2,000த்தை தாண்டியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் கொரோனா தொற்று 56,000தாண்டியுள்ளது. மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 56,845 ஆக உயர்ந்துள்ளது.