மிதுன ராசி அன்பர்களே….! இன்று விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள் ஆகியிருக்கும். விரயங்கள் கூடுதலாகவே இருக்கும். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் விரிவடையும். இடமாற்றம் வீடுமாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்கள், மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்லவேண்டும். இயந்திரங்கள் ஆயுதங்கள் நெருப்பு ஆகியவற்றை கையாளும் பொழுது தொழிலாளர்கள் ரொம்ப கவனமாக கையாளவேண்டும்.
பிள்ளைகளிடம் இன்று அன்பாக நடந்து கொள்ளுங்கள். கணவன் மனைவி இருவரும் எதையும் பேசி தீர்த்துக்கொள்வது ரொம்ப நல்லது. கூடுமானவரை புதிய முயற்சிகள் செய்யும்பொழுது மற்றவர்களிடம் ஆலோசனை கேட்டு செய்யுங்கள். சில பிரச்சினைகளையும் நீங்கள் சந்திக்க கூடியதாக இருக்கும். காதலர்கள் இன்று கண்டிப்பாக பொறுமை காக்க வேண்டும். நிதானமாகவும் செயல்பட வேண்டும்.
எதையும் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும் அதுபோலவே இன்று சூரிய பகவான் வழிபட்ட சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.