தனுசு ராசி அன்பர்களே …! ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாளாக இருக்கும். அக்கம் பக்கத்துவீட்டாருடன் பகை ஏற்படாமல் அனுசரித்துச் செல்லவேண்டும். தேவையான பொருட்களை வாங்கிச் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்களிடம் பேசுவது நல்லது. வழக்குகளில் எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் உண்டாகும். மனதில் ஒருவித கவலை இருந்துக்கொண்டே இருக்கும்.
தேவையில்லாத விஷயத்தில் மட்டும் தயவு செய்து கவனம் செலுத்த வேண்டாம். உறவினர்களிடம் அன்பாக நடப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்திலும் ரொம்ப கவனமாக இருங்கள். தேவையில்லாத உணவுகளை உட்கொண்டுவிட்டு சர்ச்சையில் சிக்கிக் கொள்ள வேண்டாம். இன்று மாலை நேரங்களில் இசைப் பாடலை ரசியுங்கள் அல்லது நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள் மிகச் சிறப்பாக இருக்கும்.
முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது போலவே இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: இளம் சிவப்பு மற்றும் நீல நிறம்.