Categories
பல்சுவை

சர்வதேச சிறப்பு வாய்ந்த தளபதி…. சினிமா வாழ்க்கை வரலாறு…!!

தமிழ்த் திரையின் முழுமதி, தயாரிப்பாளர்களின் வெகுமதி ரசிகர்களின் இதயத்து அதிபதி எங்கள் இளைய தளபதி. 1984 விஜய் என்னும் பெயர் வெற்றியில் பதிவானது. அன்புத் தொடங்கிய தனது சினிமா ஆசையை அண்ணாமலை வசனம் பேசி தந்தையின் முன் வெளிப்படுத்தினார். இதற்கான விடையை நாளைய தீர்ப்பாகும். அதற்குப்பின் கிடைத்த கசப்பான விமர்சனங்களை பூவேஉனக்காக திரைப்படத்தில் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தி உடைத்தெறிந்தார்.

1997ல் வரிசையா லவ்டுடே, ஒன்ஸ்மோர், நேருக்கு நேர், காதலுக்கு மரியாதை போன்ற வெற்றி படங்களை தந்து நட்சத்திர அந்தஸ்தை அடைந்தார். தமிழக தாய்மார்களின் மனதில் நிறைந்தார். தொடர்ந்து பிரியமுடன், துள்ளாத மனமும் துள்ளும் போன்ற திரைப்படங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் தோன்றி சிறந்த நடிகர்களின் பட்டியலில் இணைந்தார். பிறகு குஷி, பிரியமானவளே, ஷஜகான் போன்ற முத்திரை படங்களை தந்து காதல் நாயகனாக வலம் வந்தார்.

அதுமுதல் ரசிகர்கள் இவரை பற்றிக் கொண்டதால் வெற்றிகள் இவரை தொற்றிக் கொண்டன. அனல் தெறிக்கும், பொறி பறக்கும் திரைக்கதையில் சொல்லி அடித்த கில்லி. பிறகு அதிரும் வசனங்களோடு அடுக்கடுக்கான சண்டைக் காட்சிகளால் உறுதியானது போக்கிரியின் வெற்றி. பிரம்மாண்ட இயக்குனருக்கு இவரைப் பிடித்தது. அது நண்பனாய் உருவெடுத்தது. சிவாஜி, எந்திரனை தொடர்ந்து 100 கோடிகளை தனதாக்கி தனக்கென தனி பாணி உருவாக்கி வெளிவந்தது இந்தத் துப்பாக்கி.

தலைவா ஜில்லாவில் பட்டை தீட்டப்பட்டு கூர்மையாக உருவானது கத்தி. விஜய் முருகதாஸ் இணைந்தால் அது மாஸ். இந்த புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது மீண்டு எழும். அசாதாரண உழைப்பால் உயர்திரு சிவாஜி, நம்பியார், நாகேஷ், ஆச்சி, சரோஜாதேவி, விஜயகாந்த், மோகன்லால் போன்ற திரையுலக ஜாம்பவான்களுடன் கைகோர்த்து 21 இயக்குனர்களையும் 3 இசையமைப்பாளர்களையும் உருவாக்கியுள்ளார்.

14 இசையமைப்பாளர்களிடம் முப்பதுக்கும் மேலான பாடல்களை பபாடியுள்ளார். இவர் ரசிகர் மன்றமா விதைத்தது, பிறகு நற்பணி மன்றமாக முளைத்தது. இடத்தில் பின்னாடி நற்பணி மன்றம் இறுதியாக மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என்பதுதான் இவர் நினைத்தது. இலங்கை தன்னின பிரச்சனைக்காக குரல் கொடுத்ததோடு இல்லாமல், தன் ரசிகர்கள் மூலம் ஒரு லட்சம் தந்தி பிரதமரின் அலுவலகம் சென்றடைய செய்தார் மக்களின் இளைய தளபதி.

இவருடைய நேர்மையையும் சமுதாயப் பார்வையும் மதித்து இவருக்கு இவரை கௌரவிக்க டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது, தபால் தலை வெளியீட்டு விழாவிற்கு அழைத்தது, தசாவதாரம் இசை வெளியீட்டு விழாவில் ஜாக்கிசான், அமிதாப்பச்சன் போன்ற சிறப்பு விருந்தினர் பட்டியலில் இவரது பெயரும் இணைக்கப்பட்டது, சிஎஸ்கே பிராண்ட்அம்பாசிடராக நியமித்தது போன்ற பல நிகழ்வுகள் இவரை கௌரவப்படுத்தி உள்ளது. பல கோடி ரசிகர்கள் படையலும் தமிழ் சினிமாவின் தனி அடையாளம் எங்கள் விஜய். ஸ்டைலிஷான சண்டைக்காட்சிகள் இவரது கடின உழைப்புக்கான சாட்சிகள் டான்ஸ் மாஸ்டர் ஹீரோ என செல்லமாக அழைக்கப்படும் ஒரே நடிகர் நம்ம இளைய தளபதி விஜய்.

Categories

Tech |