ஒரு மனிதரிடம் எதுவுமே இல்லாத போது இருக்கும் உறுதியும், எல்லாமே இருக்கும்போது அவனிடம் இருக்கும் அணுகுமுறையும் அவன் எப்படிப்பட்டவன் என்பதை தீர்மானிக்கிறது.
விடாமுயற்சியும், மன தைரியமும் இருந்தால் குடிசையிலிருந்து கோபுரம் வரை சென்று விடலாம். கோடிகள் இருந்தும் முயற்சி இல்லை என்றால் கோபுரம் கூட இடிந்து விழுந்து மணல்மேடு ஆகிவிடும்.
பணம், புகழ், ஆதிக்கம் நம்மிடம் அதிகரிக்க அதிகரிக்க நாம் பணிவாக நடந்து கொள்ள வேண்டும். அதைவிட்டு தலைகனத்துடன் திரிந்தால் கனம் தாங்காமல் தலைகுனிந்து நடக்க வேண்டிய சூழல் உருவாகிவிடும். தலைக்கனத்தை இறக்கி வைத்து விட்டால் தலையை மட்டுமல்ல நெஞ்சை நிமிர்த்தி நடை போடலாம்.
நம்மை ஒருவர் வெறுக்கிறார் என்று கவலை கொள்ள வேண்டாம். அப்போதுதான் நம்மை சுற்றி உண்மையான நபர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை நம்மால் அறிய முடியும்.
யாருடைய அடையாளத்தையும் எடுத்துக்கொள்ளாமல் உங்களுக்கென்று தனித்துவமான அடையாளத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.