Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் : சென்னையில் கொரோனோ சிகிச்சை பெற்று வந்த 29 பேர் இன்று உயிரிழப்பு!

சென்னையில் கொரோனோ சிகிச்சை பெற்று வந்த 29 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 13 பேர் உயிரிழந்துள்ளனர். தண்டையார்பேட்டையை சேர்ந்த முதியவர், வளசரவாக்கத்தை சேர்ந்த மூதாட்டி உட்பட 13 பேர் பலியாகியுள்ளனர். சென்னை கேஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குமணன்சாவடி, கீழ்ப்பாக்கம், டிபி சத்திரம், சாஸ்திரி நகர், சவுகார்பேட்டையை சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேபோல ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனோவுக்கு சிகிச்சை பெற்று வந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். சித்தரிப்பேட்டையை சேர்ந்த முதியவர், திருவல்லிகேணியை சேர்ந்த முதியவர், நுங்கம்பாக்கத்தை சேர்ந்த முதியவர், சேத்துப்பேட்டையை சேர்ந்த முதியவர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர்.

ராஜா அண்ணாமலை புரத்தை சேர்ந்த ஆண் மற்றும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 63 வயது முதியவர் உயிரிழந்துள்ளனர். கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவமனையில் வளரசரவக்கத்தை சேர்ந்த 65 வயது முதியவர், பெரும்பாக்கத்தை சேர்ந்த 77 வயது முதியவர், அசோக் நகரை சேர்ந்த 91 வயது முதியவர் என 3 கொரோனா நோயாளிகளும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் கொரோனோவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 578ஆக உயர்ந்துள்ளது.

Categories

Tech |