செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 3,620 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 1,831 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 1,743 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி புதிதாக 51 பெருகி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,671ஆக உயர்ந்துள்ளது.
மேலும் செங்கற்பட்டில் இதுவரை கொரோனா பாதித்த 45 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னைக்கு அருகில் இருப்பதால் செங்கல்பட்டில் பாதிப்பு எண்ணிக்கையானது தொடந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதித்த மாவட்டங்கள் பட்டியலில் சென்னை முதலிடத்திலும், செங்கல்பட்டு இரண்டாம் இடத்திலும் உள்ளது.