கல்வான் நதியில் சீனா பாலம் கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய வீரர்களுக்கும் சீனர்களுக்கும் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக லடாக் எல்லைப் பகுதியில் மோதல் நிலவி வருகிறது. இதனை சுமூகமாக முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் இருதரப்பிலும் உயர்மட்ட பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. கடந்த திங்கள்கிழமை கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இது எல்லையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
அதேபோல் சீனாவிலும் இந்திய உயிரிழப்புக்கு இணையான உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வருகின்றன. இந்த மோதலை அடுத்து கல்வான் நதியில் சீனா பாலம் கட்டுவதற்கான முயற்சியில் ஈடுபடுகின்றது என்ற தகவல் வந்து கொண்டிருக்கின்றன. ‘பிளானெட் லேப்ஸ்’ என்ற நிறுவனம் செயற்கைக் கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தை அடிப்படையாக வைத்து இந்த கருத்தினை தெரிவித்து வருகிறது. இதுகுறித்து கிழக்கு ஆசிய அரசியல் விவகாரங்களுக்கான நிபுணர் ஜெப்ரி லூயிஸ் சொல்லும் போது, கல்வான் பள்ளத்தாக்கில் சீனா சாலை அமைக்கும் பணியில் ஈடுபடுவதாக தெரிகின்றது.
இது கல்வான் நதியில் பாலம் கட்டும் முயற்சியாக கூட இருக்க வாய்ப்புள்ளது. இரு தரப்பினரும் கல்வான் பள்ளத்தாக்கில் கனரக வாகனங்களை குவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்திய தரப்பில் 40 வாகனங்களும் சீன தரப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களும் இருக்கின்றது என்று தெரிவித்தார். இதனால் இந்த பிரச்சனை தொடர்ந்து நீளும் இந்தியா சீனா பிரச்சினை தொடர்ந்து நீளும் என்று தெரிகிறது.