ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பாகிஸ்தான் தீவிரவாதி சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் மாகாணம், ஸ்ரீநகர் பகுதிகளில் பாதுகாப்பு படை வீரர்கள், தீவிரவாதிகள் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. 3 தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து சிஆர்பிஎப் வீரர்கள் மற்றும் உள்ளூர் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தீவிரவாதிகள் சரண்டர் அடைய மறுத்ததால் இருதரப்பிற்கு இடையே சண்டை நடைபெற்று வருகிறது.
#UPDATE Zadibal Encounter – So far 1 unidentified terrorist killed. Operation going on. Further details shall follow: Kashmir Zone Police
— ANI (@ANI) June 21, 2020
நேற்று நடைபெற்ற தேடுதல் வேட்டையில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் இன்று மேலும் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் – பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்க பாதுகாப்பை படையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். ஸ்ரீநகரில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை மட்டும் 8 தீவிரவாதிகள் சுட்டு கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.