தமிழகம் முழுவதும் இதுவரை 1,500 போலீசார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. இதுவரை 56,845 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை பேர் 31,316 குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்ப்பட்டுள்ள நிலையில் இதுவரை மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 704 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 39,641 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இதுவரை 1,500 போலீசார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகிள்ளது. சென்னை மாநகரில் மட்டும் 850 போலீசார் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 4 பேர் ஐபிஎஸ் அதிகாரிகள் என தகவல் வெளியாகியுள்ளது.
நோய் கட்டுப்பாடு மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரே அதிகமானோர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் பாதிப்புக்கு உள்ளான போலீசாரில் 350 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னை ஐஐடியில் 184 காவலர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், மேலும் 271 காவலர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.