பிரதமர் மோடி யோகாவானது உலக மக்களிடையே ஒற்றுமையும் தோழமையும் அதிகரிக்கும் தினமாகும் என்று குறிப்பித்துள்ளார்.
ஆறாவது சர்வதேச யோகா தினமான இன்று காலை காணொளி மூலமாக மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி மனித சமூகத்தின் ஒற்றுமையையும், தோழமையையும் வளர்க்கும் சக்தியாக யோகா இருந்து வருகிறது. இனம், நிறம், பாலினம் , மதம் , தேசங்களை கடந்து அனைவருக்கும் சொந்தமானது யோகா. ஆரோக்கியமான, மகிழ்ச்சியான சமூகமாக நாம் மாற யோகா உறுதுணையாக இருக்கின்றது. சுவாச மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள மூச்சு பயிற்சி செய்வதே சிறந்த வழி. ஒரு சமூகமாக, குடும்பமாக, ஒற்றுமையுடன் பயணிப்போம். யோகாவை வாழ்வின் ஒரு அங்கமாக்கிக் கொள்வோம் என்று தெரிவித்தார்.