Categories
செங்கல்பட்டு திருவண்ணாமலை மாநில செய்திகள்

திருவண்ணாமலையில் 77 பேர், செங்கல்பட்டில் 127 பேருக்கு இன்று புதிதாக கொரோனா உறுதி…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 77 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அம்மாவட்டத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1,086 ஆக உயர்ந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று மட்டும் இங்கு 130 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.

நேற்று வரை 442 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 6 பேர் இதுவரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், நேற்றுவரை 535 பேர் சிகிச்சையில் இருந்த நிலையில் இன்று 612 ஆக அதிகரித்துள்ளது. மேலும், அதிகாரபூர்வ அறிவிப்பு மாலை சுகாதாரத்துறை வெளியிடும் அறிக்கையில் தான் தெரியும்.

அதேபோல, இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக 127 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 3747-ஆக அதிகரித்துள்ளது. நேற்றுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 3,620 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 1,831 பேர் குணமடைந்த நிலையில், 1,743 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக உள்ளது.

Categories

Tech |