இன்றைய காலகட்டத்தில் முட்டை குறித்து பல கேள்விகளும், சந்தேகங்களும் இருந்து வருகின்றது. சிலர் மஞ்சள் கருவை சாப்பிடுவது ஆரோக்கியமாக இருக்கும் என்றும், மஞ்சள் கருவை சாப்பிடாமல் தவிர்த்தால் ஆரோக்கியம் கிடைக்கும் என்றும் கூறிவருகின்றனர்.
பல்வேறு விவாதங்களில் தெரியவந்தது என்னவென்றால் நாம் மஞ்சள் கருவை தொடர்ந்து உண்ண கூடாது. அப்படி தொடர்ந்து உண்ணும் பட்சத்தில், நமக்கு இதயம் நோய் சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது முட்டையில் அதிகமான டயட்டரி கொழுப்பு இருப்பதை யாரும் மறுத்துவிட முடியாது. ஒரு முட்டையில் 185 மில்லி கிராம் அளவிற்கு டயட்டரி கொழுப்பு இருக்கிறது.
உணவில் இருக்கும் நிறைவுற்ற கொழுப்பே(saturated fat) ஆகும். உணவில் இருக்கும் சாதாரண கொழுப்பால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
கொழுப்பு அதிகமாக இருக்கும் உணவுகளை நாம் உட்கொண்டால், அதில் உள்ள கொழுப்பு பிரிந்து முழு மூலக்கூறாக மாறுகிறது. நிறைவுற்ற கொழுப்பு (saturated fat) சிறிய சிறிய குழுக்களாக பிரிந்து உடலில் கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது.