தமிழகத்தில் கொரோனோவால் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 53 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 757ஆக உயர்ந்துள்ளது. வேறு நோய் பாதிப்பு இல்லாமல் கொரோனோவால் மட்டும் இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் உயிரிழப்பு சதவீகிதம் 1.274% ஆக உள்ளது. கடந்த 8 நாட்களில் 360 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இன்று 1,438 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 32,754 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை – 22,887 பேர், செங்கல்பட்டு – 1,933, திருவள்ளூர் – 1,240, காஞ்சிபுரத்தில் 588 பேரும் குணமடைந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 55.16% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 2,532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 59,000ஐ தாண்டியுள்ளது. தமிழகம் முழுவதும் 59,377 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 2,480 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 52 பேரும் இன்று கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 1,579 பேர் ஆண்கள், 953 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் கொரோனோவால் பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 41,172 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 25,863 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று மட்டும் 29,963 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 46 அரசு மற்றும் 40 தனியார் மையங்கள் என மொத்தம் 86 கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 12 வயதுக்குட்பட்ட 2,934 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 13 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட 49,400 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 7,043 பேருக்கும் இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தகவல் அளித்துள்ளனர்.