அமாமி தீவு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட நீர்மூழ்கி கப்பல் குறித்த தகவல்களை சேகரிக்க ராணுவ மந்திரி உத்தரவு பிறப்பித்துள்ளார்
ஜப்பானில் அடையாளம் தெரியாத நீர்மூழ்கி கப்பல் ஒன்று அமாமி தீவு பகுதியில் கடந்த 18ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை அந்த கப்பல் யோகோயேட் ஜிமா தீவிற்கு மேற்கு பகுதியை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது தெரியவந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து அக்கப்பலை தீவிரமாக கண்காணித்து அது குறித்த அனைத்து விபரங்களையும் சேகரிக்க ஜப்பான் ராணுவ வீரர்களுக்கு ராணுவத் துறை மந்திரி டாரோ கோனோ உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அவரது உத்தரவையடுத்து கவாஸாகி ரோந்து விமானம், 3 ரோந்து கப்பல்கள், லாக்கீட்-3 நீர்மூழ்கி கப்பல் தடுப்பு மற்றும் கடலோர கண்காணிப்பு விமானம் சம்பவ இடத்திற்கு விரைந்து தகவல்கள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.