Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் நாளை முதல் ஒருசில தளர்வுகள் இருக்கலாம்… மாநகர காவல் ஆணையர் பேட்டி!!

சென்னை மாநகரில் இன்று மட்டும் 948 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 3 நாட்களில் 10,665 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இன்று செய்தியாளர்கள் சந்திப்பும் ஈடுபட்ட சென்னை மாநகர காவல் ஆணையர் கூறியதாவது, 144 சட்டத்தை மீறியதாக 10,604 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாஸ்க் அணியாதது உள்ளிட்ட விதிமீறல் தொடர்பாக 35,177 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் நன்றாக ஒத்துழைத்து வருகின்றனர்.

மேலும் இந்த ஊரடங்கிற்கு பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைத்தால் கொரோனவை எளிதில் வெல்லலாம். மேலும், நாளை முதல் ஒருசில தளர்வுகள் இருக்கலாம் என கூறியுள்ளார். அவ்வாறு தளர்வுகள் இருந்தாலும் கட்டுப்பாடுகளுடன் இருந்து முழு ஊரடங்கை நல்ல முறையில் கடைபிடிக்க வேண்டும்.

அதன்மூலம், நாம் கொரோனா தொற்றை அகற்றி விட அனைத்து உதவிகளை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், இதுவரை சென்னை மாநகர காவல்துறையில் 877 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதில் தற்போதுவரை 333 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து பணிக்கு திரும்பியுள்ளதாக கூறினார்.

Categories

Tech |