Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ ராசிக்கு…பதவி உயர்வும் கிடைக்கும்…பாராட்டுக்களை பெறுவீர்கள்…!

மேஷ ராசி அன்பர்களே …!    இன்று முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாளாக இருக்கும். அரிய சாதனைகளை புரிந்து புகழடைவீர்கள். புதிய நகைகள் மற்றும் செல்வம் சேரக்கூடிய வாய்ப்புகளும் உண்டு. வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். மேலதிகாரிகளின் பாராட்டு பதவி உயர்வும் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சாதகமான பலனை இன்று கிடைக்கும்.

கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை இருக்கும். பிள்ளைகள் மூலம் பெருமை ஏற்படும். காதலர்களுக்கும் இன்று இனிமையான நாளாக இருக்கும். எடுக்கும் முயற்சியில் வெற்றி இருக்கும். இன்று நூதனமான சில வேலைகளை நீங்கள் செய்து பாராட்டுகளையும் பெறுவீர்கள். கடினமான வேலைகளை எளிதாக எப்படி செய்யலாம் என்று யோசனையுடன் காரியங்களில் எதிர் கொள்வீர்கள்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீல நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்: 2 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் இளம் மஞ்சள் நிறம்..

Categories

Tech |