ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 393 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது ராஜஸ்தானில் கொரோனவால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,930 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 349 ஆக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து இன்று மட்டும் 316 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதையடுத்து மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 11,355 ஆக அதிகரித்துள்ளது. மேலும் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து திரும்பியவர்களில் 4,258 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதுவரை ராஜஸ்தானில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2,984 ஆக உள்ளது.
இதுவரை மாநிலத்தில் 6,99,126 மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதில் 14,930 பாசிட்டிவ், 6,80,233 மாதிரிகள் நெகட்டிவ் என தெரியவந்துள்ளது. மேலும் 3,963 மாதிரிகளின் முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை. இருப்பினும், ராஜஸ்தானில் கொரோனா பாதித்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது ராஜஸ்தான் மக்களுக்கு மனநிம்மதியான விஷயமாக பார்க்கப்படுகிறது.