Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன ராசிக்கு….குழப்பங்கள் ஏற்படலாம்…செயல்திறன் அதிகரிக்கும்…!

மீன ராசி அன்பர்களே…!   இன்றைய நாள் நீங்கள் நேர்மையாக நடக்க வேண்டிய நாளாக இருக்கும். கோபத்தால் குழப்பங்கள் ஏற்படலாம்.  உடலில் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி வேகம் பிடிக்கும். எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கும். லாபத்தில் இருப்பவரின் செயல்திறன் அதிகரிக்கும். இன்று உங்களுடைய உன்னதமான மனதை மற்றவர்கள் புரிந்துகொள்வார்கள்.

அதேபோல் வசீகரமான பேச்சால் அனைவரையும் கவரும் விதத்தில் நடந்து கொள்வீர்கள். தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். வாக்குவாதங்கள் நடக்கும் இடத்திலிருந்து நீங்கள் செல்வதுதான் மிகவும் சிறப்பு. தேவையற்ற பிரச்சினைகளில் தலையிட வேண்டாம்.  காதலர்கள் இன்று பொறுமை காக்க வேண்டும். பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம்: இளம் சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |