கிமு எட்டாம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் உலகின் பழமையான விளையாட்டு பாரம்பரியம் ஆகும். நவீன கால ஒலிம்பிக் முற்றிலும் மாறுபட்டதாகவும் அதிகம் பார்க்கப்படும் ஒரு நிகழ்வாகவும் உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இரண்டு மாதங்கள் உலக மக்களை மகிழ்விக்க ஒலிம்பிக் பற்றிய சில அற்புதமான உண்மைகளை பற்றிய தொகுப்பு.
2012 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி வரலாற்றிலேயே அதிக போட்டியாளர்கள் பங்கேற்ற ஒலிம்பிக் போட்டியாக கருதப்படுகிறது. 10 ஆயிரத்து 768 விளையாட்டு வீரர்கள் பங்கேற்ற இந்த போட்டியில் 5 ஆயிரத்து 992 ஆண்களும் 4 ஆயிரத்து 776 பெண்களும் கலந்து கொண்டனர்.
1896, 1900 மற்றும் 1904 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் பெருவாரியான உலக மக்களின் கவனத்தை ஈர்க்க முடியவில்லை. இதனால் பல்வேறு புதிய மாற்றங்களுடன் 1908 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகள் ஏராளமான கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கப்பட்டது. உடனடியாக உலகின் கவனத்தை ஈர்த்த இதுதான் முதல் நவீன ஒலிம்பிக் போட்டியாகவும் கருதப்படுகிறது.
1936 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒலிம்பிக் போட்டியை விளம்பரப்படுத்த ஒலிம்பிக் தீபத்தை அறிமுகப்படுத்தியவர் அடால்ப் ஹிட்லர்.
உலகின் மிகவும் பிரபலமாக உள்ள விளையாட்டுகள் மட்டுமே ஒலிம்பிக்கில் சேர்க்கப்படும். மேலும் ஒரு விளையாட்டு ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற வேண்டுமானால் அந்த விளையாட்டானது 4 கண்டங்களிலும் உள்ள 75 நாடுகளை சேர்ந்த ஆண்களும் 3 கண்டங்களில் உள்ள 40 நாடுகளைச் சேர்ந்த பெண்களும் விளையாடி இருக்க வேண்டும்.
ஒலிம்பிக் தீபம் பல்வேறு நாடுகளிலும் பல்வேறு கால நிலைகளிலும் பயணம் செய்ய வேண்டி இருப்பதால் அதில் பல புதிய மாற்றங்கள் செய்யப்பட்டன. 2000மாவது ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தீபம் நீருக்கு அடியிலும் பயணம் செய்யத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
2012 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் கொடுக்கப்பட்ட பதக்கங்கள் தான் மிகவும் பெரியதாகவும் கனமாகவும் இருந்தன. ஆனாலும் தங்கப் பதக்கங்களின் உள்ள தங்கம் வெறும் 1.5 சதவீதம் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
2012-இல் நடைபெற்ற லண்டன் ஒலிம்பிக் போட்டியில் தீபம் இங்கிலாந்தை முழுமையாக சுற்றி சுமார் 8000 மைல்கள் பயணம் செய்தது இந்த தூரமானது அமெரிக்காவின் அகலத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
ஒலிம்பிக் போட்டிகளின் போது மைதானத்தின் குறுக்கே தடையை மீறி ஓடிவரும் ரசிகர்கள்தான் ஒலிம்பிக்கின் பெரும் பிரச்சனையே. 2012-இல் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இவ்வாறு செய்த ரசிகர்களுக்கு சுமார் 20 ஆயிரம் பவுண்டுகள் அபராதமாக விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
1976 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின்போது ஒலிம்பிக் தீபத்தில் லேசர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.
2012-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா மாபெரும் வரலாற்று சாதனையை செய்துள்ளது. சுமார் 4 பில்லியன் மக்கள் இந்த தொடக்க விழாவை கண்டு களித்தனர். இது உலக மக்கள் தொகையில் பாதி அளவு என கருதப்படுகிறது.