போக்ஸோவில் கைதுசெய்யப்பட்ட நபர் கோவை மாவட்டம் சூலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். இவர் அப்பகுதியில் 7 ஆண்டுகளாக குழந்தைகள் காப்பகம் ஒன்றை நடத்திவந்துள்ளார். இந்த காப்பகத்தில் தாய் மற்றும் தந்தையை இழந்த பாதிக்கப்பட்ட சிறுமியையும் அவரது உறவினர் ஒருவர் சேர்த்துள்ளார்.
இந்தசூழலில், மேற்கொண்டு காப்பகத்தை நடத்தமுடியாமல் போன காரணத்தால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக குழந்தைகளை அவர்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைத்துவிட்டு, அதனை மூடியிருக்கிறார்.. ஆனால், பாதிக்கப்பட்ட அந்தசிறுமியை மட்டும் ஒப்படைக்காமால், வீட்டு வேலைக்காகப் பணிசெய்வதற்கு வைத்திருக்கிறார் .
வேலைக்காக அமர்த்திய பின் தொடர்ச்சியாக சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் சில நாட்களுக்கு முன் அந்தசிறுமி அவரது உறவினர் ஒருவரிடம் நடந்ததைக் கூறியுள்ளார். இதையடுத்து அவர் குழந்தைகள் நலப்பிரிவினருக்கும், சூலூர் போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தியதில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதிசெய்யப்பட்டது.. பின்னர் இந்த வழக்கு பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த நபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். மேலும் அந்தநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையிலடைத்தனர்.
இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைகள் காப்பகம் நடத்திவந்தபோது, இதேபோன்று அங்கிருந்த ஆதரவற்ற பெண் குழந்தைகளையும் பாலியல் துன்புறுத்தல் செய்தாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.