Categories
பல்சுவை

ஒலிம்பிக் தீப ஓட்டம்… அறியாத வரலாறு…!!

ஒலிம்பிக் தீப ஓட்டம் என்பது கிரீஸ் நாட்டின் ஒலிம்பியாவில் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைப்பதும் பின்னர் அதை உலகெங்கும் தொடர் ஓட்டமாக எடுத்து வந்து ஒலிம்பிக் போட்டி தொடக்க விழா அரங்கில் ஏற்றுவதும் ஆகும். போட்டி நடைபெறும் 16 நாட்களும் இரவு, பகல் எந்நேரமும் பிரகாசமாகவும் கம்பீரமாகவும் ஒளிரும் இந்த ஒலிம்பிக் தீபம் நிறைவு விழாவின்போது அணைக்கப்படுகிறது. முதலாவது நவீன ஒலிம்பிக் போட்டி 1896 ஆம் ஆண்டு ஏதென்ஸில் நடைபெற்றது என்றாலும் 1928 ஆம் ஆண்டு நெதர்லாந்தில் ஆம்ஸ்டர்டாமில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தான் முதன்முதலில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது.

பிரதான விளையாட்டு அரங்கில் ஒட்டி ஒரு கோபுரத்தின் உச்சியில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது. தற்போதைய முறைப்படி ஒலிம்பிக் தீபம் ஏற்றம் அதைத் தொடர்ந்து ஓட்டமாக கொண்டு செல்லும் நிகழ்வு 1936 ஆம் ஆண்டு பெர்லின் ஒலிம்பிக் போட்டிக்கு முன் ஒலிம்பியாவில் தொடங்கப்பட்டது. அப்போதய ஒலிம்பிக் அமைப்பு குழுத் தலைவரான காரல் டீம்தான் ஒலிம்பிக் தீப ஓட்டத்தின் மூளையாக இருந்தவர். அது பின்னர் ஒலிம்பிக் விதி பட்டியலில் 13வது விதியானது. 1936 ஆம் ஆண்டு ஒரு பரவலை பரப்பு கண்ணாடி மூலம் சூரிய கதிர்களை குவித்து அதன் மூலம் ஒலிம்பியாவில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது.

அப்போது அந்நிகழ்வில் பங்கேற்ற நவீன ஒலிம்பிக் நிறுவனர் பாரோன்டி கூபட்டின் ஒலிம்பிக் தீபத்தை ஏந்தி ஓடத் தயாராக இருந்த வீரர்களை வாழ்த்தினார். 1936 ஆம் ஆண்டிலேயே ஜெர்மனியில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியிலும் முதல் முறையாக ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது. ஆனால் ஒலிம்பியாவில் அல்லாமல் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு வளாகத்தில் மட்டும் தீபம் ஏற்றப்பட்டது. 1964ம் ஆண்டு நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் போது தான் ஒலிம்பியாவிலும் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது. அன்று முதல் இதுவரை ஒலிம்பிக் போட்டியின்போது ஒலிம்பியாவிலும் தீபம் ஏற்றுவது வழக்கமாக உள்ளது.

Categories

Tech |