உடுமலை சங்கர் கொலை வழக்கில் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு நடந்த உடுமலை சங்கர் கொலை சம்பவம் தொடர்பாக திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் மேல்முறையீட்டு வழக்கில் தற்போது குற்றவாளிகளை 5 பேரின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் ஒரு கௌசல்யாவின் தந்தை உள்ளிட்ட ஆறு பேருக்கு மரண தண்டனை விதித்து இருந்தார்கள். அதேபோல் தாய் விடுதலை செய்து உத்தரவிடப்பட்டு இருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து காவல்துறை சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி சத்தியநாராயணன் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் அமர்வு விசாரித்து தீர்ப்பு ஒத்தி வைத்த நிலையில் தற்போது இதன் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கௌசல்யாவின் தந்தை சின்னசாமி வழக்கில் இருந்து விடுவிக்க பட்டுள்ளார். அவர் மட்டுமல்லாமல் மீதி 5 பேர் மரண தண்டனையும் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது.அதேபோல் கௌசல்யாவின் தாய் உள்ளிட்டோரை விடுதலை செய்து சரியானதுதான் என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.