சங்கர் – கவுசல்யா ஆணவக்கொலை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது.
இருவேறு சமூகத்தை சேர்ந்த கவுசல்யா – சங்கர் கடந்த 2015 திருமணம் செய்து கொண்டனர். கூலிப்படையினரை ஏவி உடுமலைப்பேட்டையில் வைத்து மிகக் கொடூரமாக 2016இல் சங்கர் ஆணவ படு கொலை செய்யப்பட்டார்கள். தமிழகத்தையே உலுக்கிய இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தநிலையில், கௌசல்யாவின் தந்தை சின்னசாமி உட்பட ஆறு பேருக்கு மரண தண்டனை விதித்தது திருப்பூர் நீதிமன்றம். தந்தை சின்னசாமி, ஜெகதீசன், செல்வகுமார், தமிழ், பழனி, மணிகண்டனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி உள்ளிட்ட 3 பேர் விடுவிக்கப்பட்டனர். தண்டனையை எதிர்த்து 6 குற்றவாளிகளும், 3 பேரின் விடுதலையை எதிர்த்து காவல்துறையும் முறையீடு செய்யப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் இதன் தீர்ப்பு இன்று வெளியாகியது. இதில், முக்கிய குற்றவாளியாக இருந்த கவுசல்யாவின் தந்தை வழங்க்கில் இருந்து விடுவிக்கப்பட்டதோடு, ஐந்து பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
மேலும் கௌசல்யாவின் தாய் தனலட்சுமி உள்ளிட்ட 3 பேரின் விடுதலையை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். வழக்கில் மூன்று பேர் விடுதலையை எதிர்த்து காவல்துறை தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதே போல தன்ராஜ் கான ஆயுள் தண்டனையும், மணிகண்டனுக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு தண்டனையும் ரத்து செய்யப்பட்டது.